ARTICLE AD BOX

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தை பதம் பார்த்து வருகிறது. கோவை, மதுரை போன்ற மாவட்டங்கள் மழையில் சிக்கிய மீண்டது.
அதற்குள் சென்னையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக எடுக்கப்பட்டது. நேற்றே தமிழக அரசு துரிதமாக முன்னெச்சரிக்கைகைளை விடுத்தது. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்ககளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
அதே போல 16ஆம் தேதி ரெட் அலர்ட் என வானிலை மையம் அறிவித்த நிலையில் இன்றே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் விடாமல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு மீது விமர்சனங்களை வைத்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது பெய்து வரும் கனமழை குறித்து அமைச்சர்களை வசைபாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது X பக்கத்தில், எங்க ஏரியா. இப்போ… வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது. முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் hole ஆயிட்டோம், ஆனாலும் harm தான்.
எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க…. என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
The station வெட்கம் கெட்ட அமைச்சருங்க… திமுக அரசை விளாசிய நடிகை கஸ்தூரி! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.