ARTICLE AD BOX
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வெளியானது.
படம் முழுக்க அஜித்தை தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்க படத்தை செதுக்கியுள்ளார் ஆதிக் ரவிச்ச்ந்திரன். வெறித்தனமாக அஜித் ரசிகரான ஆதிக், படம் முழுக்க அஜித்தை மாஸாக காட்டி மிரட்டியுள்ளார்.
இதையும் படியுங்க: STR 49 பட இசையமைப்பாளரை அறிவித்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிம்பு…
இதனால் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி அளித்த நிலையில், நடுநிலையான ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றம்தான். கதையே இல்லாமல், அஜித்துக்காக படம் எடுக்கப்பட்டதாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் பரத்வாஜ் சரமாரியாக விமர்சித்துள்ளார். 20 நிமிடத்துக்கு மேல் உட்கார முடியவிலில். இது தான் வரப்போகுது என முன்கூட்டியே சுலபமாக தெரிந்துவிடும் ஒரு கதை, இரண்டரை மணி நேரம் அஜித் ரீல்ஸ் படமாகத்தான் இருந்தது.

திரிஷாவை கடத்தும் போது லேசா லேசா பாடல் எதற்கு? வில்லனுக்கு எதுக்கு ஒத்த ரூபாய் பாட்டு? எந்த இடத்துலயும் சீரியஸ் இல்லை. ஒரு கதை இருந்து ரசிகர்களை மூழ்கடிக்கணும், ஆனா கதையே இல்ல.
எங்கேயும் சீரியஸ் ஆகவே இல்லை. அஜித்தை கொண்டாடுவோம் அப்படினு டைரக்டர் சொல்லிருக்காரு. அடுத்தது என்னவரும்னு எதிர்பார்க்க ஒண்ணும் இல்ல. அஜித்தை அடுத்து எப்படி காட்ட போறாங்கனு தான் படமே. ஒரு டுவிஸ்ட்டும் இல்ல என கண்டபடி விமர்சித்துள்ளார்.