ARTICLE AD BOX
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது 49 ஆவது திரைப்படத்தில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் விவகாரத்தில் சிக்கிய நிலையில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன்-சிம்பு இயக்கும் திரைப்படத்தின் பணிகள் தொடங்கியது. “வடசென்னை” திரைப்படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள், வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திலும் இடம்பெறவுள்ளது. இதனை “The World of Vadachennai” என வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் புரொமோ வீடியோ ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.
திரையரங்கில் புரொமோ வீடியோ…
இந்த புரொமோ வீடியோ ஜூலை மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இது குறித்து வேறு விதமான ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது இந்த புரொமோ வீடியோவை முறையாக சென்சார் சான்றிதழ் பெற்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். எனினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை. ஒரு வேளை இத்திரைப்படத்தின் புரொமோ திரையரங்குகளில் வெளியானால் இது இந்திய சினிமாவிலேயே புதிய முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.