வேறு இயக்குனருக்கு கைமாறிய STR 49? ஆகாஷ் பாஸ்கரனுக்கு டாட்டா காட்டும் சிம்பு?

1 month ago 18
ARTICLE AD BOX

STR 49

“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன் தனது 49 ஆவது திரைப்படத்தில் ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தை Dawn Pictures சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாகவும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் பூஜையும் போடப்பட்டது. ஆனால் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனை வலைவீசி தேடி வரும் நிலையில் தற்போது “STR 49” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

str 49 movie is changed to mani ratnam

டாட்டா காட்டிய சிம்பு

இந்த நிலையில்தான் சிம்பு ஒரு அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. அதாவது Dawn Pictures நிறுவனத்தாரை தொடர்புகொண்ட சிம்பு, “நீங்கள் தயாரிக்கும் பிற திரைப்படங்களான இட்லி கடை, பராசக்தி போன்ற திரைப்படங்களை முதலில் வெளியிடுங்கள். அத்திரைப்படங்கள் வெளியான பிறகு உங்கள் நிறுவனத்தில் நான் நடிக்கிறேன்” என்று கூறிவிட்டாராம். 

str 49 movie is changed to mani ratnam

அந்த வகையில் சிம்புவின் 49 ஆவது திரைப்படமாக மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படம் இருக்கக்கூடும் என தெரிய வருகிறது. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாகவும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமான்டிக் டிராமாவாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் “STR 49” திரைப்படமாக மணிரத்னம் இயக்கவுள்ள திரைப்படமாகத்தான் இருக்கும் என யூகிக்கப்படுகிறது. 

  • str 49 movie is changed to mani ratnam வேறு இயக்குனருக்கு கைமாறிய STR 49? ஆகாஷ் பாஸ்கரனுக்கு டாட்டா காட்டும் சிம்பு?
  • Continue Reading

    Read Entire Article