வேலை கிடைத்ததால் விட்டுப்போன காதலியின் தம்பியை கொன்ற காதலன்.. பதறவைக்கும் சம்பவம்!

1 month ago 42
ARTICLE AD BOX

வேலை கிடைத்ததால் விட்டுப்போன காதலியின் தம்பியைக் கொன்றுவிட்டு, காதலன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் அடுத்த உழியக் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ஜார்ஜ் கோமஸ். இவருக்கு ஒரு மகளும், பெபின் ஜார்ஜ் (22) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில், மகள் கொல்லம் பகுதியில் உள்ள நீண்டகரை பகுதியில் வசித்து வரும் சப் இன்ஸ்பெக்டர் ராஜுவின் மகன் தேஜஸ் ராஜ் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில், இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரியவர, இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், அக்காவின் காதலுக்கு தம்பியான பெபின் ஜார்ஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அந்த நேரத்தில், ஜார்ஜ் கோமஸின் மகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் பின்னர் தேஜஸ் ராஜூ உடனான காதலைத் துண்டித்து, அவருடன் தொடர்புமில்லாமல் விலகிச் சென்றுள்ளார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த தேஜஸ் ராஜ், பலமுறை அப்பெண்ணை தொடர்புகொண்ட போதும் முடியவில்லை. எனவே, காதலியின் வீட்டிற்குச் சென்ற தேஜஸ் ராஜ், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு காதலியின் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். ஆனால், அதற்கு அப்பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதனையடுத்து, மார்ச் 18ஆம் தேதி தேஜஸ் ராஜ் இரவு 7 மணியளவில் காரில் தனது காதலியின் வீட்டிற்குச் சென்று கதவை தட்டியுள்ளார்.

Youth killed lover Brother

அப்போது, வீட்டினுள் இருந்த காதலியின் தம்பி பெபின் ஜார்ஜ் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். உடனே, தேஜஸ் ராஜ், தான் மறைத்து வைத்திருந்தக் கத்தியை எடுத்து பெபின் ஜார்ஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை ஜார்ஜ் கோமஸ், தேஜஸ்ராஜைத் தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும் தேஜஸ் ராஜ், ஜார்ஜ் கோமஸையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: லிப் லாக் காட்சியில் சிம்ரன்.. காதலை கைவிட்ட பிரபலம் : பல நாள் கழித்து வெளியான நிஜம்!

பின்னர், தேஜஸ் ராஜ் செம்மான்முக்கு பகுதிக்குச் சென்று, தனது கையை அறுத்து, அந்தப் பகுதியாக வந்த ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இதனையடுத்து, இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த தேஜஸ் ராஜின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேநேரம், கத்திக்குத்து ஏற்பட்டு படுகாயமடைந்த ஜார்ஜ் கோமஸ் மற்றும் பெபின் ஜார்ஜ் ஆகியோரை கொல்லம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பெபின் ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்ஜ் கோமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • பெரும் சோகம்.!ரஜினி பட இயக்குனர் திடீர் மரணம்…!!
  • Continue Reading

    Read Entire Article