வேலை செய்ய இஷ்டமில்லைனா கட்சியை விட்டு வெளியேறுங்க.. அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு!

2 hours ago 2
ARTICLE AD BOX

மதுரை வடக்கு மாவட்ட திமுகவின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில் “மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார்கள், 10 சட்டமன்ற தொகுதிகளிலும் எந்தவொரு பாகுபாடும் இன்றி செயலாற்றி வருகிறோம்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1,122 வாக்கு சாவடிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. சில வாக்கு சாவடிகளில் உறுதிமொழி நிகழ்வு நடத்தப்படவில்லை என தெரிகிறது.

திமுக தலைமைக் கழகம் சொல்லும் பணிகளை செய்ய முடியாத நிர்வாகிகள் கட்சியை விட்டு ஒதுங்கி ஒய்வு எடுத்து கொள்ளுங்கள். பணிகள் செய்யாத நிர்வாகிகள் வகிக்கும் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

சில நிர்வாகிகள் நாங்கள் என்ன அரசு வேலையா பார்க்கிறோம் எனக் கேட்டுள்ளனர், அரசு வேலை பார்க்க போகிறோம் என கேட்கும் நிர்வாகிகளை திமுகவை விட்டு விடுவிக்க தயாராக இருக்கிறோம்.

இனி வரும் காலங்களில் திமுகவினருக்கு வேலைப் பழுக்கல் கடுமையாக இருக்கும், கட்சிப்பணியில் நிர்வாகிகள் சாக்கு, போக்கு சொல்வதற்கு இனி நேரமும் இல்லை, காலமும் இல்லை, தொகுதி பொறுப்பாளர்கள் சொல்லும் பணிகளை பூத் கமிட்டியினர் செய்ய வேண்டும்” என கூறினார்.

  • Lokesh betrayed Aamir Khan.. lost his Bollywood film opportunity! அமீர்கானுக்கு துரோகம் செய்த லோகேஷ்.. பறிபோனது பாலிவுட் பட வாய்ப்பு!
  • Continue Reading

    Read Entire Article