ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்மைக் காலமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து விருது, பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறார்.
இந்த வருடத்திற்கான கல்வி விருது வழங்கும் விழா இரு கட்டமாக அண்மையில் நடைபெற்றது. இதனிடையே விஜய் விருது வழங்கும் விழா குறித்து கருத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கொச்சையாக பேசினார்.
இதையும் படியுங்க: நான் எம்எல்ஏ ஆன பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.. திமுக எம்எல்ஏ கலகல!
மாணவிகள் மற்றும் பெற்றோர் குறித்து அவர் ஆபாசமாக பேசியது தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மாணவர்கள் குறித்தும், பெற்றோர் குறித்து ஆபாசமாக பேசிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் மூலம் புகார் கொடுத்தார்.
இந்த புகாரை ஏற்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக ஆளுநர், தமிழக சபாநாயகருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளித்துள்ளனர்.

6 months ago
62









English (US) ·