ARTICLE AD BOX
விருதுநகர் நகராட்சி 14வது வார்டு பகுதியில் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு புதிய சுகாதார வளாகத்தைத் திறந்துவைத்தார். பின்னர், பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்.
இதையும் படியுங்க: 7 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.. கணவரை பிரிவதாக சாய்னா அறிவிப்பு!
அப்போது அவர் அளித்த பேட்டியில், விஜய் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், அவர் பேசிய கருத்தும் முக்கியமானது. ஒவ்வொரு துறையிலும் நாம் வளர்ந்து வருகிறோம். காவல்துறையில் சிலர் பயன்படுத்தும், பின்பற்றும் நடைமுறைகள், அடக்குமுறை, காவல்நிலைய இறப்பு தொடர்கிறது. இது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.
வேறு மாநிலங்களில் இதன் வீச்சு பெரியதாக இருக்கலாம். ஆனால்,அவர்களது திறன் அவ்வளவுதான். ஆனால், தமிழக காவல்துறை அறிவார்ந்த, போற்றக்கூடியத்துறை. காவல் நிலைய இறப்பு போன்ற வழிமுறை மாற்றப்பட வேண்டும். அஜித்குமார் மரணம் அதிர்ச்சிளித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சாரி சொல்லியதும், வருத்தம் தெரிவித்துள்ளதும் அவர் பெருந்தன்மையை குறிக்கிறது. தமிழக காவல்துறையை சிலர் தங்களது செயலாள் கலங்கப்படுத்துகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். காவல்துறையின் நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டும். இதற்காகன மாற்றம் வேண்டும்.
அறிவியல் முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக காவல்துறை குற்றம் சாட்டியவர்களை காப்பாற்றிவிடும் என்ற சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதால் சிபிஐக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது.
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் அவர்கள் குடும்பப் பிரச்சினை. காவல் நிலையத்திற்கு வந்தால் அதைப்பற்றி நாம் பேசலாம்.
வைகோ மூத்த அரசியல்வாதி. சாத்தூரில் மதிமுக கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. வைகோ வார்த்தைகள் உங்களை சுட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.