ARTICLE AD BOX
மதிமுக தலைவர் வைகோ வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் முன்னாள் அவைத்தலைவராக இருந்த துரைசாமி தொழிற்சங்கம் என்ற பெயரில் 300 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்து விட்டதாக பேசி உள்ளார்.
இது குறித்து திருப்பூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக முன்னாள் அவை தலைவர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது சங்க சொத்து சங்கத்திற்கு மட்டுமே அதனை எந்த கட்சியும் கட்டுப்படுத்தாது. நான் திமுகவில் இருந்த போது துவக்கியது இந்த சங்கம்.

அவர் நல்ல பேச்சாளர் என்பது முன்னர் தான் தற்போது அந்த திறமையும் அவரிடம் இல்லை அந்த விரக்தியில் பேசி வருகிறார். அவருக்கு மனநலம் பாதித்து விட்டது. அவர் பேச்சுக்கு அவரே அனுபவிப்பார். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கத்தேவை இல்லை. இப்போது கூட அவர் கூறியதால் தான் நான் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயிலில் கஷ்டப்பட்டேன் என வைகோ சொல்கிறார் ஆனால் அவருக்கு அனைத்து வசதிகளும் ஜெயிலிலும் ஏற்பாடு செய்யப்பட்டு தரப்பட்டது.

திருப்பூருக்கு வந்த வைகோ சில்லி சிக்கன் கேட்டு சாப்பிட்டார். அவருக்கு கார் வாங்கி கொடுத்தேன். அவரின் பாராட்டு விழா சென்னையில் வேண்டாம் என கூறிய போது விழாவை வேண்டாம் என நான் கூறியதாக சிலர் தவறாக தெரிவித்த நிலையில் என்னை தவறாக பேசினார்.
அதற்கு மன்னிப்பு கடிதமும் அவரே 2015 ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். மகனை தேர்தலில் நிற்கவைக்க நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றதால் அவர் அப்போது அந்த முடிவை திரும்பப்பெற்றார் என மதிமுக முன்னாள் அவைத்தலைவர் துரைசாமி திருப்பூரில் பேட்டியளித்தார்
