ARTICLE AD BOX
கோவை வாழ் விஸ்வகர்ம சமுதாய மக்கள் ஒன்றிணைந்து, ஶ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஶ்ரீ விஸ்வப்பிரம்ம திருவீதி ஊர்வலம் நடைபெற்றது.
கோவை வாழ் விஸ்வகர்மா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நடத்திய ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா, 20ஆம் ஆண்டு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய ஒற்றுமை பெருவிழா சார்பில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, தலைவர் எஸ். பலவேசம் ஆச்சாரியார், பொருளாளர் எம்.பாண்டியன் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மாலை காமாட்சி அம்மன் ஆலயத்தில் தொடங்கி, நகரத்தின் முக்கிய வீதிகளில் ஶ்ரீ விஸ்வப்பிரம்ம திருவீதி ஊர்வலமாக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவானது தெய்வங்களுக்கு கட்டிட வேலை கலைஞர்களும், கைவினைப் பொருள்களை உருவாக்குபவர்களும் விஸ்வகர்மா கடவுளை வணங்குகின்றனர்.
மேலும் இந்த ஊர்வலத்தில் மயிலாட்டம் , ஒயிலாட்டம், வான வேடிக்கை, தப்பாட்டம் , கேரள செண்டை மேளம் , வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட துணிகளை உடுத்தி பெண்கள் நடனம் ஆடி மக்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
இதில் விஸ்வகர்மா கோவை வாழ் சமுதாயமக்கள் விஸ்வகர்மா ஜகத்குரு பாபுஜி சுவாமியின் ஜெலேந்திரன் ராஜ்மோகன் ஜெயக்குமார் நடராஜ் பூபால் கணேசன் சபரி கிரிசன் லோகு பட்டாசு பாண்டி புஷ்பராஜ் ஐயப்பன் சரவணன் கோபால் மதன் நலவாரிய செல்வராஜ் மோகன், சபரீஷ் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த ஊர்வலத்தை சிறப்பாக நடத்தினர்.
