ARTICLE AD BOX
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்…
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான். தனது “எந்திரன்” திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்.

ஆனால் சமீப காலமாக இவரது திரைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமையவில்லை. குறிப்பாக இவர் இயக்கிய “இந்தியன் 2” திரைப்படம் இவரது கெரியரிலேயே மிகப்பெரிய தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து வெளிவந்த “கேம் சேஞ்சர்” திரைப்படமும் சரியாக போகவில்லை. தற்போது “இந்தியன் 3” திரைப்படத்தை உருவாக்கி வரும் ஷங்கர், அடுத்ததாக “வேள்பாரி” நாவலை படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்
“இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” போன்ற திரைப்படங்களின் தோல்விகள் காரணமாக டாப் நடிகர்கள் பலரும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க தயங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றனவாம். ஷங்கர் “வேள்பாரி” திரைப்படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்தாலும் “இந்தியன் 3” திரைப்படத்தை அவர் இயக்கப்போகும் திரைப்படம் குறித்த எந்த தகவலும் இல்லை எனவும் கூறுகின்றனர். தமிழின் பிரம்மாண்ட இயக்குனரின் நிலை இப்படி ஆகிவிட்டதே என கோலிவுட் வட்டாரங்களில் சோக அலை வீசி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.