ARTICLE AD BOX
ஸ்டண்ட் கலைஞர் மரணம்
இயக்குனர் பா ரஞ்சித்தின் “வேட்டுவம்” படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு உயிரின் மீது அவ்வளவு அலட்சியமா? என பலரும் கொந்தளித்து வந்தனர். இது தொடர்பாக பா ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போதும் ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரை பணயம் வைத்தே உழைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களிலும் மருத்துவ உதவிகளிலும் அலட்சியம் காட்டி வருவது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வழக்கமாக இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. இதனிடையே ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜின் இழப்பு பலரையும் கவலைக்குள்ளாக்கியது. பலர் பா ரஞ்சித்தின் மீது தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். எனினும் பா ரஞ்சித் மீது எந்த தவறும் இல்லை எனவும் ஒரு பக்கம் ஆதரவு குரல்களும் வந்த வண்ணம் உள்ளது.

தமிழ் நடிகர்களை தூக்கி சாப்பிட்ட அக்சய் குமார்
இந்த நிலையில் திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஜாஸ் குலாப் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரிடம் ஒரு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதாவது ஸ்டண்ட் கலைஞர்களின் துயரங்களை விளக்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி அக்சய் குமாரிடம் பேசினாராம். இந்த கோரிக்கையை ஏற்ற அக்சய் குமார், பலரது மனதில் நிலைத்து நிற்பது போன்ற ஒரு காரியத்தை செய்துள்ளார்.

அதாவது சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காப்பீட்டு தொகையை வழங்கியுள்ளார் அக்சய் குமார். இதன் முழு பிரீமியம் தொகையையும் அக்சய் குமாரே செலுத்தவுள்ளார். தமிழ் நடிகர்கள் இந்த விஷயத்தில் மூச்சே காட்டாத நிலையில் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் இந்த பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
.
