ARTICLE AD BOX
பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன் சார்பாக தயாரித்து இயக்கி வரும் திரைப்படம் “வேட்டுவம்”. இத்திரைப்படத்தில் ஆர்யா, கெத்து தினேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் பகுதியில் இத்திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது நடந்த விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் உயிரிழந்தார். ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தது தொடர்பாக பா ரஞ்சித் உட்பட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்தினருக்கு நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித்தும் நிதியுதவி அளித்துள்ளார். அதாவது தனது படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ்ஜின் குடும்பத்தினருக்கு இயக்குனர் பா ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
