ARTICLE AD BOX
கிங் கான்
பாலிவுட்டின் கிங் கான் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக வலம் வருபவர்தான் ஷாருக்கான். இந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகராக தற்போது வலம் வருபவர் இவரே. சமீப காலமாக அவரது திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. எனினும் அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த “ஜவான்” திரைப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
ஸ்டண்ட் காட்சியில் ஏற்பட்ட காயம்
“ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து “டங்கி” என்ற திரைப்படத்தில் நடித்த ஷாருக்கான் தற்போது “கிங்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சண்டை காட்சியை படமாக்கியபோது ஷாருக்கானுக்கு தசை கிழிந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஷாருக்கான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் ஷாருக்கானை ஒரு மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக “கிங்” படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மீண்டும் தொடங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
