ARTICLE AD BOX
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்களை செய்திருக்கிறோம். 2011-2021 ல் கோவை மாநகராட்சியில் உள்ள சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்திருக்கிறோம். வடக்கு சட்டமன்ற தொகுதியில் தடையில்லா பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி இருக்கிறோம். ஸ்டாலின் பல்வேறு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், கடந்த அதிமுக ஆட்சி இரண்டு ஆட்சி என சொல்லுகிறார். அவர் கண்ணை திறந்து பார்த்தால்தான் தெரியும், கோவை மாவட்டத்திற்கு வந்து பாலங்களை பார்த்தாலே நாங்கள் செய்த சாதனைகள் உங்களுக்கு சான்றுகளாக நிற்கும்.
கோவை மாநகர மக்கள் எங்கெல்லாம் பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்களோ, அங்கெல்லாம் பாலம் கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. ஆனால் அதை வந்து ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துவிட்டு காரில் அதே பாலத்தில் சொகுசாக செல்கிறார் ஸ்டாலின். சொல்லும்போது சொல்கிறார் பாலம் அழகாக இருக்கிறது என்று. நிச்சயமாக தான் இருக்கும் ஏனென்றால் அது அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது.
அதேபோல கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை இருக்கிறது என கோரிக்கை வைத்தனர். மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் 1100 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்தத் திட்டத்திற்கும் திமுகவின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்து ஸ்டிக்கர் ஒட்டி ரிப்பன் திறந்து வைத்து சென்றார். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? இவ்வளவு செய்தது அதிமுக அரசு ஆனால் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக அரசு.
இவர்கள் கொண்டு வந்த திட்டம் போல் மக்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள். பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் அனைத்து திட்டங்களுமே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான். திமுகவால் திறக்கத்தான் முடியும் திட்டங்களை கொண்டுவர முடியாது. எப்பொழுது பார்த்தாலும் ஸ்டாலின் கூட்டணி பலமாக இருக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் மக்களை நம்பிக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கு கூற விரும்புகிறேன்.
இங்கு கூட்டணியை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது மக்களை நம்ப வேண்டும். ஆனால் மக்கள் இப்பொழுது இருக்க கூடிய விடியா அரசு எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து, 2026 சட்டமன்ற தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல அந்த கூட்டணியில் இருக்கக்கூடிய குட்டிக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சி-கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டே போய்விட்டது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். முகவரியே இல்லாமல் இருக்கிறது.
நான் இதுவரை யாரையுமே குறை சொல்லி பேசியது கிடையாது. ஆனால் அடிக்கடி ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என சொல்லுகிறீர்களே எப்படி மீட்பீர்கள் எனக் கேட்கிறார்கள்.. நிச்சயமாக வரப்போகிற தேர்தல் மூலமாக தான் மீட்க போகிறோம். ஏனென்றால் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
மக்களுடைய பிரச்சனையை தீர்க்க முடியாத திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதல்வர் அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிற தேர்தல். தமிழ்நாடு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தமிழகத்தை மீட்போம்.
அதுதான் இந்த அதிமுகவின் லட்சியம். அதனால் முத்தரசன் அவர்களே உங்கள் கட்சியைப் போன்று எங்கள் கட்சியை நினைத்து விடாதீர்கள். எங்கள் கட்சியில் பிரச்சனை என்ற பேச்சுக்கு இடமில்லை. எங்கள் கூட்டணியில் எப்பொழுதும் பிரச்சனையில்லை. பிரச்சனையே திமுக தலைமையில் இருக்கிற கூட்டணியில்தான் பிரச்சனை இருக்கிறது.
அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன் தலைவர் புதிதாக வந்திருக்கிறார். சண்முகம் அடிக்கடி பேசிவிட்டார், திமுக ஆட்சியில் மக்களுடைய பிரச்சனையை தீர்க்கவில்லை என்ற கருத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார். அதிமுக பலம் வாய்ந்து கொண்டு இருக்கிறது. திமுக நாட்டு மக்களின் பிரச்சனையை அணுகவும் இல்லை தீர்க்கவும் இல்லை என அவர் குரல் கொடுத்திருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து சண்முகம் அவர்கள் நாட்டு மக்களை பற்றி சிந்திப்பது வரவேற்கத்தக்கது.
ஏனென்றால் அவர்கள் திமுகவை எதிர்த்து ஒருபோதும் பேசியது இல்லை. ஏனென்றால் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். அதேபோல தொல் திருமாவளவன், பேசுகிறார் அதிமுகவும் பாரதிய ஜனதாவும் இணக்கமாக இல்லை என்று. உங்களுக்கு வேண்டுமென்றால் nobel பரிசு கொடுத்து விடலாம். நீங்க வந்து பாருங்கள் நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்று. நாங்கள் அனைவரும் எப்பொழுதும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்..
ஆனால் உங்களுடைய கூட்டணி கட்சிகள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் என்று வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எதையும் பிரித்துக் கூறவில்லை நீங்கள் சொல்வதை தான் நாங்கள் கூறுகிறோம். உள்துறை அமைச்சர் வந்தபோது நாங்கள் கூட்டணி அமைத்து விட்டோம் எங்கள் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என கூறினார்.
வெற்றி பெற்ற பிறகு அதிமுக ஆட்சி அமைக்கும் எங்களுடைய முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என குறிப்பிட்டார். எங்களுடைய கூட்டணி அன்றைய தினமே தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.
ஆனால் எங்களுடைய கூட்டணியை பார்த்து உங்களுக்கு பயம் வந்துவிட்டது. இன்னும் பல கட்சிகள் எங்களுடைய கூட்டணி கட்சிகளில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் நிறைய கூட்டணிகள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வருவார்கள். நம்மளுடைய கூட்டணியை குறித்து எப்பொழுது அவர்கள் பேசினார்களோ அப்பொழுதே அவர்களின் பயம் தெரிந்து விட்டது. 2026 234 இடங்களில் 210-ல் அதிமுக நிச்சயம் வென்று ஆட்சி அமைக்கும். ஆனால் நீங்கள் வெல்வோம் என நினைப்பது ஒருபோதும் நடக்காது.
ஏனென்றால் நீங்கள் மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் தானே மக்கள் உங்களை நினைத்துப் பார்ப்பார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் மக்களை மட்டுமே நினைத்துப் பார்க்கிறீர்கள். ஆனால் பாரதிய ஜனதாவும் அதிமுகவும் மக்களை பற்றி சிந்திக்கும் கவலைப்படும் கட்சி. அதுதான் நம்மளுக்கு மிகப்பெரிய பலம். தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஸ்டாலின் 50 மாதங்கள் ஆட்சி நடத்தி இருக்கிற. ஆனால் கோவை மாவட்டத்திற்கு ஏதாவது புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறதா? பிறகு எப்படி வந்து மக்களிடம் ஓட்டு கேட்பார்.
அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிக்கு சம்பந்தம் விடும். சிறுமையிலிருந்து பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. பொம்மை முதல்வர் திறமையற்ற முதல்வரால் இதை தடுக்க முடியவில்லை. கொங்கு மண்டல பகுதிகளில் முதியவர்கள் எங்கு வசிக்கிறார்களோ அங்கு கொள்ளை கூட்டம் உள்ளே புகுந்து அவர்களை கடுமையாக கொலை செய்திருக்கிறது. இந்த செய்தி எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்திருக்கிறது.
இதை தடுக்க இந்த ஆட்சியில் திராணி இல்லை. மதுரையில் கஞ்சா விற்பதாக தந்தையும் மகனும் புகார் கொடுக்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டவர்கள் வீடு புகுந்து அவர்களை வெட்டிக்கொலை செய்கிறார்கள். இன்றைய தினம் இந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் என நாட்டு மக்கள் ஒருவருக்குமே பாதுகாப்பு இல்லை.
இப்படிப்பட்ட ஆட்சி உங்களுக்கு தேவையா?.. மக்கள் அரசாங்கத்தை நம்பி இருக்கிறார்கள். காவல்துறை சிறப்பாக செயல்பட்டால்தான் மக்களை பாதுகாக்க முடியும். பயிர்களுக்கு வேலை எப்படி முக்கியமோ அது போல பாதுகாப்பு மக்களுக்கு அவசியம். திமுக ஆட்சி இருக்கும் வரை மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும் வரை சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆனால் தினம்தோறும் மக்கள் அச்சத்தில் உறைந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கோவையில் வரும் காவல் வாகன ஓட்டுனரும் அவருடைய மனைவியும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை வெட்டி நகையை பறித்துச் சென்றுள்ளனர். மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை கோயம்புத்தூரில் இருக்கிறது. இப்படியே போனால் தமிழகம் வேறு மாதிரியாய்விடும். b இப்படி ஒரு ஆட்சி தமிழகத்திற்கு தேவையே இல்லை. மக்களை கண்ணின் இமைகள் போல பாதுகாத்தது.
திமுக ஆட்சிக்கு வந்து விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி என மக்களை துன்பத்தில் தள்ளி உள்ளது. பல மாவட்டங்களில் செய்த தவறின் காரணமாக வரி மேல் வரி போட்டு, மக்களின் தலையில் சுமையை வைத்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் குப்பைக்கே வரி போட்டு அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம் தான். இனிமேல் அதனால் அதை குப்பை அரசாங்கம் என்று சொல்ல வேண்டும்.
இவர்கள் வரி போடாத இடமே கிடையாது. அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. இது எந்த ஆட்சியில் ஆவது இருந்ததா? தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஆட்சியில் கோவை மாநகரத்தில் மட்டும் 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களால் ஒரு கல்லூரி கொடுக்க முடிந்ததா?. அதேபோல ஏழு சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது.
கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை பூங்கா ஆயிரம் கோடியில் திறக்கப்பட்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மாணவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணமே நம் ஆட்சியில் கொடுத்த கல்லூரிகள் தான். ஆனால் உங்க ஆட்சியில் என்ன கட்டி இருக்கிறீர்கள். பார்த்தார்கள் கோவில் பணம் மிச்சம் இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் , கோயிலை பார்த்தாலே கண் உறுத்தியது போல.. அதை வைத்து கல்லூரி கட்டுகிறோம் என்றார்கள்.
நீங்கள் எதற்காக உண்டிகளில் பணம் போடுகிறீர்கள்.. கோவிலில் நற்பணிகளுக்காக செலுத்துகிறீர்கள். அந்தப் பணத்தை எடுத்து இவர்கள் கல்லூரி கட்டுகிறார்களாம். ஏன் அதை இவர்களின் அரசாங்க பணத்தில் இருந்து கட்ட வேண்டியதுதானே?. வேண்டுமென்றே திட்டமிட்டு அறநிலைத்துறை நிதியை எடுத்து நீங்கள் இப்படி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்,?.. இதையெல்லாம் ஒரே சதிச் செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.
நம்முடைய கோவை மாநகரம் வளர்ந்து வரும் மாநிலம், தொழில் நகரம். ஆனால் திமுக ஆட்சியில் தொழில்கள் நலிவடைந்துவிட்டது. மின் கட்டணம் போன்றவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கிறார்கள். இந்த தொழிலை தவிர வேறு எங்களுக்கு எந்த தொழிலும் தெரியாத என தொழிலாளர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்கள். இந்த அரசாங்கம் எங்களை வஞ்சிக்கிறது என கூறியிருக்கிறார்கள் அதையும் நான் சிறக்க அதிமுக ஆட்சி வந்ததும் செய்து தரப்படும்.
அதேபோல மொத்தத்தில், ஸ்டாலின் ஆட்சி “Simply waste” என்று தான் சொல்ல வேண்டும். 2026-ல் ஸ்டாலினின் மாய ஆட்சியை ஒழித்து அம்மாவின் ஆட்சியை நிலை நிறுத்துவோம். அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அதேபோல நம்முடைய கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் நிற்கிறார்களோ அந்த சின்னத்தை பார்த்து வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என கூறினார்.