ஸ்டாலின் யார் என தெரியாது… ஆனால் விஜய்யை எனக்கு தெரியும் : He is a Darling..ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர்!

6 months ago 87
ARTICLE AD BOX
Vijay manu

சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பள்ளிக்கு வந்த அவருக்கு அங்கிருந்த மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து பழங்கால துப்பாக்கியை பரிசாக வழங்கினர்.

தொடர்ந்து மாணவர்களுடன் உற்சாக நடனமாடிய அவர், தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.அப்போது அவரிடம் தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த இடங்களான, மகாபலிபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு தனக்கு தென்னகம் பற்றி அவ்வளவாக தெரியாது என பேசினார். தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியுமா? என கேட்டதற்கு தெரியாது என பதிலளித்தார். பிரக்ஞானந்தாவை தெரியுமா என்ற கேள்விக்கு, நன்றாக தெரியும் என்ற மனு பாக்கர், நடிகர் விஜய்யை தெரியுமா என்ற கேள்விக்கு டிகர் விஜய்யை நன்றாக தெரியும் என பதிலளித்தார்.

அப்போது அந்த அரங்கில் இருந்தவர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர்.

The station ஸ்டாலின் யார் என தெரியாது… ஆனால் விஜய்யை எனக்கு தெரியும் : He is simply a Darling..ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர்! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article