ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினார்களா? வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?
இதையும் படியுங்க: ரத்தம் கக்கி சாவீர்கள்… முன்னாள் அமைச்சர் பேச்சால் சிரிப்பொலி!!
போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்துவிட்டீர்கள், அதை விற்றவர் எங்கே? காட்டுக்குள் சந்தனக் கடத்தல் செய்த வீரப்பன், யானைத் தந்தம் கடத்தியவர்கள், கடத்தல்காரர்கள் என்று கூறுவீர்கள். விற்றவர் காட்டுக்குள் இருந்தார். ஆனால், வாங்கியவர் எங்கே இருந்தார்? அவர்களில் எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்?
கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்தும் அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவர் அதிமுக நிர்வாகி என்பதால் இதைத் திசைதிருப்புகிறீர்கள். அப்படியென்றால், திமுகவுக்கும் போதைப் பொருளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? போதைப் பொருள் எவ்வாறு புழக்கத்தில் உள்ளது? அதன் வேரை அறுங்கள். கிளைகளை மட்டும் வெட்டுகிறீர்கள் என ஆவேசமாக பேசினார்.
Tags: Actor Krishna Arrest, Actor Srikanth Arrest, dmk, drugs use case, Naam tamilar party, Politics, seeman, அரசியல், சீமான், திமுக, நடிகர் கிருஷ்ணா, நடிகர் ஸ்ரீகாந்த் கைது, நாம் தமிழர் கட்சி