ARTICLE AD BOX
வெற்றி இயக்குனர்…
சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் விமர்சகர்கள் மத்தியிலும் அத்திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியலை ஆதரிப்பவர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில் வெற்றிமாறன் ஹரிஷ் கல்யாண நடித்த திரைப்படம் ஒன்றில் பணியாற்றியது பற்றிய ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

டீசல்
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் “டீசல்”. இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். இத்திரைப்படம் படமாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இத்திரைப்படம் வெளியாகாமல் இருக்கும் நிலையில் சமீப நாட்களாக இத்திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான தீவிர முயற்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், “டீசல்” திரைப்படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளாராம். சமீபத்தில் கூட படக்குழு இத்திரைப்படத்தை வெற்றிமாறனுக்கு திரையிட்டு காட்டினார்களாம். படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை வெற்றிமாறன் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
“டீசல்” திரைப்படத்தை போலவே ஹரிஷ் கல்யாண் நடித்த “நூறு கோடி வானவில்” என்ற திரைப்படமும் படமாக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியும் வெளிவராமல் இருக்கிறது. இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை “பூ” சசி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
