ARTICLE AD BOX
பிசியான நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கவுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு படுபிசியாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாது பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
SK Productions
சிவகார்த்திகேயன் தான் நடித்த “கனா”, “டாக்டர்”, “டான்” போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளது மட்டுமன்றி “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”, “வாழ்”, “குரங்கு பெடல்”, “கொட்டுக்காளி” போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இதில் “கொட்டுக்காளி” திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. “கொட்டுக்காளி” கோலிவுட்டில் ஒரு உலக சினிமா என்றே கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். “ஹவுஸ் மேட்ஸ்” என்று இத்திரைப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் சிவகார்த்திகேயனின் நண்பரும் கூட.
கதாநாயகியாக அர்ஷா பைஜு என்பவர் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் காளி வெங்கட், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோ ஹாரர் திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 months ago
88









English (US) ·