ARTICLE AD BOX
சுமாரான வரவேற்பு
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் “லால் சலாம்”. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்கள் மத்தியில் மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது.
ஹார்ட் டிஸ்க் தொலஞ்சிப்போச்சு…
இத்திரைப்படத்தை குறித்த பல பேட்டிகளில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இத்திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருந்த பல காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துப்போய்விட்டதாகவும் ஆதலால் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டதாகவும் கூறினார்.
அந்த வகையில் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்க ஓடிடி நிறுவனங்களை அணுகியபோது, தொலைந்துப்போன ஹார்ட் டிஸ்க்கை கண்டுபிடித்து அதில் உள்ள காட்சிகளை இதில் இணைத்தால் ஒழிய இத்திரைப்படத்தை எங்களால் விலைக்கு வாங்க முடியாது என கூறிவிட்டதாக ஒரு செய்தி வெளியானது. ஆதலால் இத்திரைப்படம் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் ஓடிடிக்கு விற்கப்படாமலே இருந்தது.
ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்
இந்த நிலையில் “லால் சலாம்” திரைப்படம் வருகிற 4 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இத்திரைப்படத்தில் பல காட்சிகள் இணைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவுக்ம் ஒரு தகவல் வெளிவருகிறது. ஹார்ட் டிஸ்க்கில் தவறவிட்ட காட்சிகளை எப்படியோ கண்டுபிடித்து இந்த ஓடிடி வெளியீட்டில் இணைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

7 months ago
90









English (US) ·