ஹீரோ வேஷமே வேண்டாம்பா?- சந்தானம் எடுத்த திடீர் முடிவு! கடைசில இப்படி ஆகிடுச்சே?

1 month ago 27
ARTICLE AD BOX

காமெடியன் டூ ஹீரோ

விஜய் தொலைக்காட்சியின் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட சந்தானம் “மன்மதன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது கவுண்ட்டர் வசனங்களின் மூலம் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்திய சந்தானம் ஒரு கட்டத்திற்குப் பிறகு காமெடி திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கத்தொடங்கினார். 

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”,  “ஏ1”, “தில்லுக்கு துட்டு”, “டிடி ரிட்டன்ஸ்” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தானம் நடுவில் “ஏஜென்ட் கண்ணாயிரம்”, “குலுகுலு” போன்ற வித்தியாசமான கதைக்களங்களிலும் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அத்திரைப்படங்கள் சரியாக போகவில்லை. 

santhanam to be act in rajinikanth jailer 2 movie

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் வெளிவந்து சுமாரான வரவேற்பே பெற்றது. இதனிடையேதான் “STR 49” திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து காமெடி ரோலில் சந்தானம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. 

நடித்தால் ஹீரோவாகத்தான் என்று இருந்த நிலையில் “STR 49” திரைப்படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடிக்கவுள்ளது ஆச்சரியத்தை கிளப்பியது. மீண்டும் சந்தானம் தனது டிராக்குக்கு வந்துவிட்டார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

ரஜினியுடன் சந்தானம்

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறியவர் தற்போது தொடர்ந்து “STR 49”, “ஜெயிலர் 2” ஆகிய திரைப்படங்களில் காமெடி ரோலில் நடிக்கவுள்ளதாக வெளிவரும் செய்திகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

santhanam to be act in rajinikanth jailer 2 movie

“மதகஜராஜா” திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் தனது பழைய டிராக்கிற்கு வந்துவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் சந்தானம் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவரும் தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரு வேளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் “லிங்கா” திரைப்படத்திற்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து ரஜினியுடன் சந்தானம் நடிக்கும் திரைப்படமாக “ஜெயிலர் 2” அமையும். 

  • santhanam to be act in rajinikanth jailer 2 movie ஹீரோ வேஷமே வேண்டாம்பா?- சந்தானம் எடுத்த திடீர் முடிவு! கடைசில இப்படி ஆகிடுச்சே?
  • Continue Reading

    Read Entire Article