ARTICLE AD BOX

நடிகர் மாதவன் - அப்பாஸ் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்னலே. இத்திரைப்படத்தின் இந்தி பதிப்பான ரெஹனா ஹே தேரே தில் மெய்ன் திரைப்படத்திற்கும் ஹாரிஸ் இசையமைத்தார்.

GVM & ஹாரிஸ் கோம்போவில் வெளியான 2-வது தமிழ் திரைப்படம் காக்க காக்க. இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான கர்சனா திரைப்படத்திற்கும் ஹாரிஸ் இசையமைத்தார்.

நடிகர் கமல்rஹாசன் - ஜோதிகா நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. GVM & ஹாரிஸ் கோம்போவில் வெளியான 3-வது தமிழ் திரைப்படம் இதுவாகும்.

நடிகர் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில், 2007-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம். GVM & ஹாரிஸ் கோம்போ-வில் வெளியான 4-வது தமிழ் திரைப்படமாக இது அமைந்தது.

இயக்குனர் GVM உடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். இத்திரைப்படம் ஆனது, GVM & ஹாரிஸ் கோம்போவில் வெளியான 5-வது தமிழ் திரைப்படம்.

நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இத்திரைப்படம் ஆனது, GVM & ஹாரிஸ் கோம்போவில் வெளியான 6-வது தமிழ் திரைப்படம்.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். GVM இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசைமைத்துள்ளார்.

GVM உடன் இணைந்து அதிக படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளராக ஹாரிஸ் பார்க்கப்படுகிறார். ஹாரிஸ்க்கு அடுத்தபடியாக ARR ரகுமான் பார்க்கப்படுகிறார்.

Thanks For Reading!