ARTICLE AD BOX

மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 13 வயதில் பாடல்களை பாட ஆரம்பித்தார். அவருடைய குரலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.368 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது

2வது இடத்தில் பின்னணி பாடகி துளசி குமார் உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.210 கோடி ஆகும். இவரது Tum Jo Aaye பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது

3வது இடத்தில் மாய குரலழகி ஸ்ரேயா கோஷல் உள்ளார். தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.185 கோடி ஆகும்

4வது இடத்தை பாடகி சுனித செளஹான் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.100 முதல் ரூ.110 கோடி வரை இருக்கலாம். இவரது குரலில் வெளியான Sheila Ki Jawani பாடல் மிகவும் பிரபலமாகும்

5வது இடத்தில் பாடகி நேஹா கக்கர் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.104 கோடி ஆகும். சினிமாவில் பாடுவதை தாண்டி லைவ் கச்சேரியிலும் நேஹா ஈடுபடுவார். இவர் பாடிய Kala Chasma-க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

6வது இடத்தில் பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.80 முதல் ரூ.100 கோடி வரை இருக்கலாம். இவரது In aankhon ki masti பாடல் மிகவும் பிரபலமாகும்

7வது இடத்தில் பாடகி ஆல்கா யாக்னிக் உள்ளார். 1990களில் இவரது பாடல்களுக்கு தனி வரவேற்பு இருந்தது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.68 கோடி ஆகும். இவர் பாடியதில் 'Gali maine chand' பாடல் தனி இடத்தை கொண்டுள்ளது

அழகிய குரலால் பல விருதுகளை வென்றவர் பாடகி மோனாலி தாகூர். இவரது சொத்து மதிப்பு ரூ.25 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவரது பாடியதில் Moh Moh Ke Dhage மிகவும் பிரபலமாகும்

Thanks For Reading!