அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘V’ எழுத்து திரைப்படங்கள்!

1 month ago 23
ARTICLE AD BOX
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ‘V’ எனும் எழுத்து கொண்டு துவங்கும் திரைப்படங்களின் பட்டியலை இங்கு காணலாம்!
Image 1
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான முதல் ‘V’ எழுத்து திரைப்படம் வான்மதி (Vaanmathi) ஆகும். இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் நடிகர் அஜித், நாயகி ஸ்வாதியுடன் நடித்திருந்தார்!
Image 2
இயக்குன்ர SJ சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வாலி (Vaalee). இத்திரைப்படமானது நடிகர் அஜித் குமாரின் இரண்டாவது ‘V’ எழுத்து திரைப்படம் ஆகும்!
Image 3
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வில்லன் (Villain). இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மீனா, கிரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்!
Image 4
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் வரலாறு (Varalaaru). நடிகர் அஜித்தின் நடிப்பு திறமைக்கு சான்றாய் அமைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று!
Image 5
நடிகர் அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படம் வீரம் (Veeram). இத்திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கினார்!
Image 6
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் மீண்டும் ஒரு முறை இணைந்த திரைப்படம் வேதாளம் (Vedalam). நடிகை சுருதி ஹாசன், லட்சுமி மேனன் இருவரும் நடித்திருந்தனர்!
Image 7
இயக்குனர் சிவா - அஜித் ஜோடியில் மீண்டும் ஒரு முறை என V எழுத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம் (Viswasam). நடிகை நயன்தாரா இத்திரைப்பத்தில் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது!
Image 8
இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இணைந்து நடித்த திரைப்படம் வலிமை (Valimai). ஆக்ஷன் திரைப்படமான இது, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 8-வது V எழுத்து திரைப்படம் ஆகும்.
Image 9
இயக்குனர் மகிழ் திருமேணியுடன் நடிகர் அஜித் கைகோர்த்த திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). திரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்க வெளியான இத்திரைப்படம், அஜித் நடிப்பில் வெளியான 9-வது V எழுத்து திரைப்படம் ஆகும்.
Image 10
Thanks For Reading!
Read Entire Article