ARTICLE AD BOX

கதையின் நாயகி Jenna Ortega-வின் Wednesday Addams பாத்திரத்தில் முதலில் நடிக்க பரிந்துரைக்கப்பட்டவர் Emma Myers. எனினும், ஒரு சில காரணங்களால், இந்த வாய்ப்பு Jenna Ortega-விற்கு கிடைத்தது!

Wednesday Addams பாத்திரத்தில் நடிக்க, Jenna Ortega-வுக்கான நேர்காணல் இணையம் வழியே நடத்தப்பட்டுள்ளது. குறித்த இந்த நேர்காணலின் போது Ortega; நியூசிலாந்து நாட்டில் X (2022) படப்பிடிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது!

Wednesday தொடரில் இசைக்கருவிகளை வாசிக்கும் Jenna Ortega; இத்தொடருக்கு முன்னதாக இசைக்கருவிகளை தொட்டதே கிடையாதாம். இத்தொடருக்காக இசைக்கருவிகளை (cello) கையாள கற்றுக் கொண்டுள்ளார்!

Wednesday Addams பாத்திரத்தின் தேவைக்காக இசை மட்டும் அல்ல, வில்வித்தை, ஜெர்மன் மொழி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் கற்றுள்ளார் Jenna Ortega.

Wednesday தொடரை உலகளவில் பிரபலமாக்கியது, தொடரில் இடம்பெற்ற Wednesday Addams-ன் நடனம் தான். இந்த நடனத்தை, அப்பாத்திரம் ஏற்று நடித்த Jenna Ortega-வே வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

பிரபலமான இந்த Wednesday நடனத்தை வடிவமைத்து ஆடிய போது நடிகை Jenna Ortega; கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடுமையான காய்ச்சலின் போது இந்த நடனத்தை இவர் ஆடியுள்ளார்!

90-களின் காலகட்டத்தில் Wednesday Addams-ன் பாத்திரத்தில் நடத்த நடிகை Christina Ricci. 2022-ல் வெளியான இந்த Wednesday தொடரில், Ricci-ன் சாயல் இருக்க கூடாது என்பதற்காக அவருடான தொடர்பை துண்டித்துள்ளார், Jenna Ortega!

Wednesday தொடரின் எந்த ஒரு காட்சியிலும் Jenna Ortega கண் சிமிட்டியிருக்க மாட்டார். இத்தொடரின் இயக்குனர் கோரிக்கையின் பேரில், Ortega இவ்வாறு நடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Thanks For Reading!