ARTICLE AD BOX

அப்பாஸ் அலிபாய் பர்மவல்லா மற்றும் முஸ்தான் அலிபாய் பர்மவல்லா எனும் சகோதரர்களின் ஜோடியே, அப்பாஸ் - முஸ்தான் இயக்குனர் ஜோடியாக குறிக்கப்படுகிறது. 1985 துவங்கி இந்த ஜோடி தரார், சோல்ஜர் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளது!

1970 - 90 இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ் திரையுலகை மிரட்டிய இயக்குனர் ஜோடி ‘தேவராஜ் - மோகன்’. தங்களின் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜா-வை அறிமுகம் செய்தது இந்த இயக்குனர் ஜோடி தான்!

கன்னட திரையுலகை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட இயக்குனர் ஜோடி. இவர்கள் ஜோடியில் மொத்தம் 27 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன; இவற்றில் பெரும்பாலும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ் குமார் நடிப்பில் வெளியானவை!

ஜோசப் டி சாமி & ஜெரால்ட் ஆரோக்கியசாமி எனும் இரு இயக்குனர்கள் இணைந்து JD - Jerry எனும் பெயரில் உள்ளாசம் (1997), விசில் (2003) உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கினர். சமீபத்தில் வெளியான The Legend (2023) திரைப்படமும் இந்த ஜோடியின் இயக்கத்தில் தான் வெளியானது!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பராசத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்த இயக்குனர் ஜோடி ‘கிருஷ்ணன் - பஞ்சு’ ஜோடி. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்கைள இயக்கியுள்ளனது இந்த இயக்குனர் ஜோடி!

புஷ்கர் - காயத்திரி, தமிழகத்தை சேர்ந்த கணவன் - மனைவி இயக்குனர் ஜோடி. கல்லூரி நண்பர்களாக அறிமுகமாகி, பின் வாழ்கையிலும் - தொழில் துறையிலும் இணைந்த ஜோடி. ஓரம்போ (2007), விக்ரம் வேதா (2017), வதந்தி போன்றவை இவர்களது பிரபலமான படைப்புகள் ஆகும்!

ஆந்திராவை சேர்ந்த இரு இயக்குனர்கள் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா DK இருவரும் இணைந்து பாலிவுட்டின் சிறந்த பல படைப்புகளை இயக்கியுள்ளனர். Happy Ending (2014), A Gentleman (2017) போன்றவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவை!

பாலிவுட்டின் பிரபலமான சகோதர்கள்; இவர்களுள் ஷியாம் ராம்சே மற்றும் துளசி ராம்சே இருவரும் இணைந்து பல வெற்றி (ஹாரர்) திரைப்படங்களை அளித்து, பாலிவுட்டின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றனர்!

Thanks For Reading!