ARTICLE AD BOX

பெங்களூருவில் வசிக்கும் மலையாள குடும்பத்தில் 1994ம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி பிறந்தார் ரேபா மோனிகா ஜான். இவர் வேதியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவருக்கு 2022ல் Joemon Joseph என்பவருடன் திருமணம் நடைபெற்றது

ரேபாவின் திரைப்பயணத்திற்கு ஆரம்ப புள்ளியாக Midukki எனும் ரியாலிட்டி ஷோ அமைந்தது. புத்திசாலியான பெண்களை கண்டறியும் அந்த ஷோவின் இரண்டாவது ரன்னர் அப்பாகவும் ரேபா தேர்வு செய்யப்பட்டார்

ரியாலிட்டி ஷோவை தொடர்ந்து நடிப்பு மீது ரேபா-க்கு ஆர்வம் அதிகரித்தது. 2016ல் Jacobinte Swargarajyam எனும் மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது

ரேபா-க்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக வாய்ப்புகள் வர தொடங்கியது. குறிப்பாக, விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் ரேபா நடித்து சினிமாவில் கவனிக்கத்தக்க நபராக மாறினார்

நடிப்பிற்கு நடுவே மாடலிங்கில் ரேபா கவனம் செலுத்தி வந்தார். ஏராளமான முக்கிய பிராண்டுகளுக்கு மாடலாகவும் பணியாற்றியுள்ளார்

ரேபாக்கு செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்குமாம். அவர் தனது செல்லப்பிராணி Scooby-வுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர செய்வார்

சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது ஈர்ப்பு இருந்துள்ளது. அவர் கிளாசிக்கல் டான்சராக முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார்

சினிமா கேரியரை தாண்டி சோசியல் மீடியாவிலும் ரேபா செம ஆக்டிவ்வாக இருப்பார். அவர் வெகேஷனில் எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அவரது இன்ஸ்டா பக்கத்தை 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர்

Thanks For Reading!