ARTICLE AD BOX

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் வரக்கூடிய ரேசிங் காட்சியை, ரஷியாவில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டனர். லாக்வுடன் கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு, 2021ல் ரஷ்யா சென்ற படக்குழுவினர், ஆக்சன் காட்சியை மிகவும் சிறப்பாக படம்பிடித்திருந்தனர்

இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும் சமயத்தில், பீஸ்ட் படக்குழுவினர் சில முக்கிய காட்சிகளை ரஷியாவில் படம்பிடித்தனர். கொரோனாவின் இரண்டாம் அலை வருவதற்கு முன்பு, ரஷியா ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டனர்

சியான் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா திரைப்படத்தை, ஏராளமான வெளிநாடுகளில் படம்பிடித்தனர். அவர்கள் ரஷ்யாவில் படம்பிடித்த சமயத்தில் கொரோனா காரணமாக வெளியேற்றப்பட்டனர். பிறகு 1 வருடம் காத்திருந்து மீண்டும் ரஷியாவுக்கு சென்று மிதமுள்ள காட்சியை படம்பிடித்தனர்

ரவி மோகன் நடித்த தாம் தூம் திரைப்படத்தின் 50 சதவீதம் படம்பிடிப்பு, ரஷியாவில் தான் நடத்தப்பட்டது. ரஷியாவின் வெவ்வேறு பகுதிகளை இந்த திரைப்படத்தில் கோலிவுட் ரசிகர்கள் கண்டு ரசிக்க முடியும்.

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்சரா ஹாசன் நடிப்பில் உருவான அக்னி சிறகுகள் திரைப்படத்தின் முக்கிய பகுதிகள் ரஷியாவில் தான் படமாக்கப்பட்டது. அதீத குளிரில் ஷூட்டிங் செய்யும் படத்தையும் இயக்குனர் நவீன் ஷேர் செய்திருந்தார்

வெங்கட் பிரவு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம், ரஷியா, துருக்கி மற்றும் இலங்கை என ஏராளமான வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது

தென்னந்தியா மக்களுக்கு பிரஷ்ஷான அனுபவத்தை தரவே ரஷியாவை தேர்வு செய்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியில் கூறியிருந்தார். அங்கு விஜய் பைக் ஓட்டிய காட்சி, படத்தின் ஹைலைட் சீன் என்றும் சொல்லலாம். இப்படம் உலகளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது

மாதவன் நடிப்பில் உருவான ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா, ஜார்ஜியா, பிரான்ஸ் மட்டுமின்றி ரஷியாவிலும் நடைபெற்றது

Thanks For Reading!